Monday,18th of February 2013
சென்னை::மைனா படத்தை பிரபு சாலமன் தனது நண்பர் ஜான் மேக்ஸுடன் இணைந்து ஷலோம் ஸ்டுடியோ மூலம் தயாரித்தார். ரெட் ஜெயண்ட் படத்தை வாங்கியதால் தயாரிப்பின் வலி பெரிதாக தெரியவில்லை.
அடுத்து கும்கி படத்தை இயக்கிக் கொண்டே ஷலோம் ஸ்டுடியோ சார்பில் சாட்டை படத்தை தயாரித்தார். தமிழக கல்விநிலையங்களை நிற்க வைத்து கேள்வி கேட்கிறது என்று பரவலாக ஜல்லியடிக்கப்பட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் சாட்டையின் நிக்கர் கழற்றப்பட்டது.
இயக்கம், தயாரிப்பு என ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று தடுமாறுகிறாரே என நண்பர்களுக்கு வருத்தம். கடவுள்தான் பிரபு சாலமனை காப்பாத்தணும் என்று வேண்டுவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. எந்த மேடையாக இருந்தாலும் பிரைஸ் தி லார்ட் சொல்லாமல் பேச்சை தொடங்க மாட்டார் பிரபு சாலமன், அவ்வளவு பக்தி.
சாட்டையடி பலமாக இருந்ததால் இனி தயாரிப்பு இல்லை, இயக்கம் மட்டும்தான் என்று முடிவெடுத்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரத்தில் இப்படியொரு நல்ல முடிவை எடுத்திருப்பதைப் பார்த்தால் பிரபு சாலமனை கர்த்தர் காப்பாற்றினார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
Comments
Post a Comment