Wednesday,20th of February 2013
சென்னை::அங்காடித் தெரு மகேஷ் நடித்து வந்த 'சித்தன்' படத்தின் தலைப்பு 'யாசகன்' என்று மாற்றப்பட்டுள்ளது. அகரம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கே.கே.சந்தோஷபாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை அமீர் மற்றும் சசிகுமாரிடன் உதவி இயக்குநராக பணியாற்றிய துரைவாணன் இயக்குகிறார்.
மகேஷுக்கு ஜோடியாக கேரள புதுவரவு நிரஞ்சனா நடிக்கிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படம் மதுரையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கனிமொழி, லீலை ஆகியப் படங்களுக்கு இசையமைத்த சதீஷ் சக்ரவர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கே.வி.ஆனந்தின் உதவியாளர் பாபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
வரும் மார்ச் மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது அதைத் தொடர்ந்து படமும் விரைவில் வெளியாகிறது.
Comments
Post a Comment