Friday,1st of February 2013
சென்னை::திருமணம் முறிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துவிட்டேன் என்றார் மம்தா மோகன்தாஸ். நடிகை மம்தா மோகன்தாஸ் பஹ்ரைன் தொழில் அதிபர் பிரஜித் பதம்நாபனை மணந்தார். பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் மம்தா கூறியதாவது: நடிக்க வருவதற்கு முன் பாடகியாக இருந்தேன். மேல் படிப்பில் கவனம் செலுத்தினேன். இந்நிலை யில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. நடிகையாக ஜெயிக்க மாட்டேன் என்று எண்ணியதுடன் மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல முடிவு செய்தேன். ஆனால் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மலையாளத்தில் ‘லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறேன்.
முழுநேரம் இதற்கு செலவிடுகிறேன். இந்த வாழ்க்கையை அப்படியே தொடர நினைக்கிறேன். இசை கற்க ஆர்வம் அதிகம். அதையும் தள்ளிப்போட்டிருக்கிறேன். இயக்குனர் கமல் படத்தில் ஏற்றிருக்கும் வேடம் என்னை முற்றிலுமாக புதிய தோற்றத்தில் காட்டும். நிஜ கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன். அதற்காக எடுக்கும் கவனம் மிக அதிகம். காஸ்டியூம் முதல் தோற்றம்வரை கண்காணிக்க வேண்டி இருக்கிறது. கடந்த ஆண்டு நட்சத்திர கிரிக்கெட்டின் தூதராக இருக்க அழைப்பு வந்தது. ஆனால் திருமண பிஸியில் இருந்ததால் ஏற்கவில்லை. ஆனால் இந்த வருடம் நான் அங்கிருப்பேன். இந்தி படத்தில் இருந்தும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தென்னிந்திய நடிகையை தேடிக்கொண்டிருக்கிற இயக்குனர் நான் பொருத்தமாக இருப்பேன் என்று கூறி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது.
Comments
Post a Comment