Tuesday,19th of February 2013
சென்னை::சிங்கம் படத்தை தொடர்ந்து, "சிங்கம்-2 படத்திலும் ஹீரோயினாகநடிக்கிறார், அனுஷ்கா .இதே படத்தில், இன்னொரு ஹீரோயினாக, ஹன்சிகாவும் நடிப்பதால் அவர்களுக்கிடையே கடுமையான கவர்ச்சி போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து அனுஷ்கா கூறுகையில், "டைரக்டர் ஹரி படத்தில், கதைக்கு தான் எப்போதுமே முதலிடம் கொடுப்பார். பிறகெப்படி எனக்கும், ஹன்சிகாவுக்குமிடையே கவர்ச்சி போட்டி வெடிக்கும் என்று, எதிர் கேள்வி கேட்கிறார். மேலும், "சிங்கம் படத்தில் பெரும்பாலும் பாடல்காட்சிகளுக்கே பயன்படுத்தப்பட்ட என்னை, இரண்டாம் பாகத்தில் நிறையவே நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். இப்படம், "யடுகு 2 என்ற பெயரில், தெலுங்கிலும் தயாராவதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த, இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறேன் என்கிறார், அனுஷ்கா.
Comments
Post a Comment