தமிழ் சினிமா என்னை மறந்தது ஏன்?: பத்மப்ரியா சிறப்பு பேட்டி!!!

Thursday,7th of February 2013
சென்னை::சினிமாவுக்கு வந்து 10 வருடங்களையும், எண்ணிக்கையில் 50 படங்களையும் நெருங்கிக் கொண்டிருக்கிறார் பத்மப்ரியா. கேரளத்து பெண்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் தனி ராஜாங்கம் நடத்தும்போது தமிழ்நாட்டு பொண்ணு தன்னந்தனியாக மலையாளத்தில் ஜெயித்து வருகிறார். இனி அவரின் சிறப்பு பேட்டி...

* தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருப்பதற்கு ஏதாவது சிறப்பு காரணம் இருக்கா?

நான் எங்க ஒதுங்கி இருக்கேன். நீங்கதான் ஒதுக்கி வச்சிருக்கீங்க. தவமாய் தவமிருந்து, சத்தம்போடாதே, மிருகம், பொக்கிஷம் படங்கள்ல என்னோட திறமைய கொட்டி நடிச்சிருக்கேன். இதைவிட நான் என்ன செய்றது. அப்படி இருந்தும் தமிழ் சினிமா என்னை ஏன் மறந்திருச்சுன்னு நீங்கதான் கேட்டுச் சொல்லணும்.

* நீங்க கமர்ஷியல் படங்கள்ல நடிக்க மறுத்தது காரணமாக இருக்குமோ?

நான் எப்போ கமர்ஷியல் படத்துல நடிக்க மறுத்தேன். இப்படித்தான் பல வதந்திகளை கிளப்பி விட்டு என்னைய தமிழ் நாட்டு பக்கமே வரவிடாம வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். மலையாளத்துல கேட்டுப் பாருங்க கமர்ஷியல் படங்கள்ல கிளாமர்ல பட்டைய கிளப்பி இருக்கேன். தமிழ்ல நான் நடிச்ச பட்டியல், இரும்கோட்டை முரட்டு சிங்கம் படங்கள்லாம் கமர்ஷியல் படங்கள்தானே.

* தமிழ் மிருகம் படத்துல டைரக்டர் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டார், மலையாள மதுர பஸ் படத்துல நீங்க தயாரிப்பாளர்கிட்ட மன்னிப்பு கேட்குறீங்க என்னதான் நடக்குது?

இதெல்லாம் நேர்மையா நடந்துக்குற பொண்ணுங்க சந்திக்கிற பிரச்னைகள்தான். எல்லா பிரச்னையிலையும் நான் நேர்மையா நடந்திருக்கேன். இதுக்குமேல அதுபத்தி பேச வேண்டாமே.

* மலையாள பேச்சுலர் பார்ட்டில ஒரு பாட்டுக்கு ஆடுறீங்க, தமிழ் தங்க மீன்கள்ல கெஸ்ட் ரோல் பண்றீங்க. இதெல்லாம் மார்க்கெட்டை காலி பண்ணிடாதா?

இந்த மார்க்கெட் பத்தி பேசுறதே தப்பு. இதென்ன கத்திரிக்கா மாங்காய் வியாபாரமா சீசன் இருக்குறப்போ விக்றதுக்கும், வாங்குறதுக்கும். இல்லாதப்போ ஸ்டாக் வச்சிக்கிறதுக்கும். பேச்சுலர் பார்ட்டி இயக்குனரும், தங்க மீன்கள் ராமும் என்னோட பிரண்டஸ். அவுங்களுக்காக அதைச் செய்தேன். மற்றவர்கள் கேட்டா நிச்சயம் செய்ய மாட்டேன்.

* எந்த படத்துல நடிச்சாலும் அதில் உதவி டைரக்டர் மாதிரி வேலை செய்வீங்களாமே?

வேலை செய்றேன்னு சொல்றது ரொம்ப பெரிய வார்த்தை. நான் சினிமா கத்துக்கிறேன். உங்க பத்திரிகை ஆபீசுல நாலு நாள் நான் இருக்குற மாதிரி இருந்தா நீங்க எப்படி ஒர்க் பண்றீங்கன்னு கத்துக்குவேன். இது என்னோட பழக்கம். அதுமாதிரி சினிமால நடிக்கிறப்போவே சினிமா பத்தி கத்துக்குறேன்.

* அப்படீன்னா படம் இயக்குவீங்களா?

நிச்சயமாக இயக்குவேன். ஆனா இப்போ இல்லை. நிறைய டைம் இருக்கு. இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

* அமெரிக்காவில் படிக்கிறீங்களாமே?

நியூயார்க் யுனிவர்சிட்டில எம்பிஏ படிக்கிறேன். வருடத்துக்கு மூன்று மாதம்தான் அதுக்கு ஒதுக்குறேன். பத்மப்பரியா படிக்க போயிட்டாங்கன்னு கிளப்பி விட்டு வர்ற சான்சை கெடுத்துடாதீங்க.

*ஒரே ஒரு இந்திப் படத்துல நடிச்சிட்டு விலகிட்டீங்களே?

நான் ஏங்க விலகுறேன். ஒரு படத்துலதான் சான்ஸ் கிடைச்சுது நடிச்சேன். அதுவும் கமர்ஷியல் படம் இல்லை, ஆர்ட் பிலிம். நல்ல படங்கள் கிடைச்சா இந்தி என்ன ஆப்பிரிக்க மொழியில கூட நடிப்பேன். பெங்காலி, இங்கிலீஸ் படத்துலகூட நடிச்சிருக்கேன் தெரியுமா.

* தமிழ் படங்கள்ல நடிக்க வாய்ப்பு இருக்கா?

நான் சொந்தப் படம் எடுக்கப்போறது இல்லை. நல்ல கதையும், நல்ல இயக்குனரும் கிடைச்சிட்டா நாளைக்கே நடிப்பேன்.

* திருமணம்...?

ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம். ஏன் நடிகர்கள் பேட்டியில மட்டும் அவுங்க கல்யாணத்தை பத்தி கேக்குறதே இல்லை. சரி நான் பதில் சொல்றேன். நல்ல மாப்பிள்ளை கிடைச்சா உடனே கல்யாணம் பண்ணிக்குவேன். கல்யாணத்துக்கு பிறகும் நடிப்பேன். இப்ப யாரையாவது லவ் பண்றேனான்னு கேட்டுடாதீங்க. லவ் பண்ணல. பண்ணினாலும் சொல்ல மாட்டேன். காதல் ரகசியமா இருக்கும், கல்யாணம் ஓப்பனா இருக்கும் போதுமா.

Comments