Wednesday,6th of February 2013
சென்னை::நடிகை நீத்து சந்திரா, ஏற்கனவே, "யுத்தம் செய் படத்தில், "கன்னித் தீவு பொண்ணா என்ற பாடலுக்கு, பக்காவான ஆட்டம் போட்டிருந்தார். இது, கோலிவுட் ரசிகர்களிடையே, நீத்துவுக்கு பெரும், வரவேற்பை பெற்றுத் தந்தது.
தற்போது,"ஆதி பகவனில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வரும், நீத்து, அடுத்தபடியாக, "சேட்டை டீமிலும் இணைகிறார். ஆர்யா, சந்தானம், அஞ்சலி, ஹன்சிகா போன்ற, நட்சத்திர பட்டாளங்கள் குவிந்துள்ள, இந்த படத்தில், நீத்துவும் கைகோர்த்துள்ளார்.இதில்,"லைலா, லைலா என்ற பாடலுக்கு, ஆர்யா, சந்தானம் ஆகியோருடன் சோர்ந்து, கலக்கலான ஆட்டம் போடப் போகிறாராம், நீத்து. இந்த பாடலுக்கான படப் பிடிப்பு, விரைவில் துவங்கவுள்ளது. "சேட்டை படம், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற, "டெல்லி பெல்லி படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment