கமல் மகள் அக்ஷராவை துரத்தும் தெலுங்கு படஉலகம்!!!

Sunday,24th of February 2013
சென்னை::கமலின் மூத்த மகள் ஸ்ருதி திரையில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் கமலின் இளைய மகளான அக்ஷராவோ, திரைக்குப்பின்னால் இருந்து படங்களை இயக்குவதாக முன்பே அறிவித்திருந்தார். இருப்பினும், தனது கடல் படத்தில் நடிக்க முதலில் அக்ஷராவைத்தான் பேசினார் மணிரத்னம். ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. அதையடுத்து, சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் அக்காள் ஸ்ருதியுடன் வந்திருநத அக்ஷராவை பார்த்த சில தெலுங்கு படாதிபதிகள் அவரை எப்படியேனும் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்குப்பட தயாரிப்பாளருமான நாகபாபுவின் மகன் வருண்தேஜ் அறிமுகமாகும் படத்துக்கு அக்ஷராவை கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து அக்ஷரா தற்போது மும்பையில் அம்மா சரிகாவுடன் தங்கியிருப்பதால், அவரை சந்தித்து பேசி வருகிறார்களாம். ஆனால் நடிப்பதில் போதிய ஆர்வம் இல்லாமல் இருக்கும் அக்ஷரா எந்த சாதகமான பதிலை சொல்லாமல் இழுத்தடிக்கிறாராம். இருப்பினும் எப்படியேனும் அவரை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று தொடர்ந்து கல்லெறிந்து வருகிறார்கள் ஆந்திரவாலாக்கள்.

Comments