Monday,2th of February 2013
சென்னை::தனுஷுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா. தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளைÕ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா மோத்வானி. இதையடுத்து விஜய்யுடன் ‘வேலாயுதம்Õ ஜெயம் ரவியுடன் ‘எங்கேயும் காதல்Õ, உதயநிதியுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி‘ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். தற்போது ‘சிங்கம் 2Õவில் சூர்யா, ஆர்யாவுடன் ‘சேட்டைÕ, கார்த்தியுடன் ‘பிரியாணிÕ, சிம்புவுடன் ÔவாலுÕ, Ôவேட்டை மன்னன்Õ படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் பல படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் கால்ஷீட் கேட்டனர். அதற்கு உடனடியாக ஹன்சிகா ஒப்புதல் தரவில்லை. பின் திடீரென நடிக்க மறுத்துவிட்டார். இது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, ‘தமிழில் சேட்டை, சிங்கம் 2, மற்றும் சிம்புவுடன் 2 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் நடிக்கிறேன். இந்நிலையில் தனுஷ் படத்திற்கு கால்ஷீட் தர முடியாத நிலை உள்ளதுÕ என்றார். இதையடுத்து வேறு ஹீரோயின் கால்ஷீட்டுக்காக தனுஷ் காத்திருக்கிறார்.
Comments
Post a Comment