கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday,16th of February 2013
சென்னை::காஜல் அகர்வால், அக்ஷய் குமார் நடித்துள்ள ‘ஸ்பெஷல் 26 படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலர் அனுமதி கேட்டிருப்பதாக சர்ச்சைக்குரிய படங்கள் மூலம் விளம்பரம் தேடும் இயக்குனர் நீரஜ் பாண்டே கூறுகிறார். ஏற்கனவே இவர் இயக்கிய ‘ஏ வெட்னஸ்டே படம்தான் தமிழில் கமல் நடிப்பில் ‘உன் னைப்போல் ஒருவன் என்ற பெயரில் ரீமேக் ஆனது.

சிவா மனசுல சக்தி படத்துக்கு பிறகு ஜோடி சேராமலிருந்த ஜீவா, சந்தானம் மீண்டும் என்றென்றும் புன்னகை படத்தில் இணைந்திருக்கிறார்களாம். காதல் கலந்த ஜாலியான இப்படத்தை அஹமத் இயக்குகிறார். த்ரிஷா ஹீரோயின்.

மகதீரா பட இயக்குனர் ராஜமவுலி தற்போது இயக்கிவரும் பாஹுபாலி படத்தையடுத்து பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் இதுபற்றி அவரிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் பிரசாந்த் படம் எதுவும்தான் இயக்கவில்லை என்று டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார் ராஜமவுலி.

விஜய் நடிக்கும் ‘தலைவா படத்துக்கு மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் 3 பாடல்களுக்கு இசை அமைத்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் 4வது பாடலுக்கு இசை அமைத்து வருகிறார்.

கார்த்தி நடிக்க, ராஜேஷ் இயக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா பட ஷூட்டிங் குற்றாலத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஹீரோயின் காஜல் அகர்வால்.

அமீர் இயக்கத்தில் ‘ஆதிபகவன் படம் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயின் நீது சந்திரா. இரண்டரை வருட இடைவெளிக்கு பிறகு தான் நடிக்கும் தமிழ் படம் வருவதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் நீது.

தனுஷ் நடிக்கும் ‘சொட்டவாளக்குட்டி‘ படத்துக்கு ‘நய்யாண்டி என பெயர் மாற்றம் செய்த இயக்குனர் சற்குணம் அதன் ஷூட்டிங்கை தொடங்கி னார். கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்த இந்த ஷூட்டிங் தனுஷ் இந்தியில் நடிக்க சென்றதால் தாமதமாக தொடங்கி உள்ளது.

பிரபு தேவா நடிக்கும் ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நடன இயக்குனர் ரெமோ டிசோசா இயக்கியுள்ள இப்படம் நாளை ரிலீஸ். இந்தியில் ஏற்கனவே ரிலீசாகிவிட்டது.

பிரசன்னா ஜோடியாக லேகா வாஷிங்டன் நடிக்கும் படத்துக்கு ‘கல்யாண சமையல் சாதம் என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஆர்.எஸ்.பிரசன்னா இயக்குகிறார்.

‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாரை இயக்கிய பிரபுதேவா தற்போது அவருடன் இணைந்து விளம்பர படமொன்றில் நடித்திருக்கிறார். முதன்முறையாக அக்ஷய்குமா ருடன் விளம்பர படத்தில் நடிப்பதற்கு டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரபுதேவா ‘ஏபிசிடி’ படத்தில் தனக்கும் படத்தில் நடித்தவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

காதலர் தினமான நேற்று ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’,‘ நேசம் நெசப்படுதே’, ‘வனயுத்தம்’ ஆகிய 3 படங்கள் ரிலீஸ் ஆனது. மேலும் பல்வேறு படங்களின் ஒரு பாடல் அடங்கிய ஆடியோ சிடிக்களும் வெளியாகின.

‘சேட்டை’, ‘சிங்கம் 2’ என கைநிறைய தமிழ், தெலுங்கு படங்களை வைத்திருக்கும் ஹன்சிகா மோத்வானி கடந்த 40 நாட்களாக தொடர்ந்து இடைவெளி இல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம். இந்த பிஸியிலும் இசை கேட்பது, சினிமா பார்ப்பது என்று நேரத்தை ஒதுக்கி செலவிட்டாராம்.

மக்கள் நல மன்றம் சமூக அமைப்பின் தூதராக பொறுப்பு ஏற்றிருக்கிறார் கார்த்தி. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்தது டன் சமீபத்தில் இந்த அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். ‘பிரியாணி’ படத்தில் பிஸியாக நடித் துக்கொண்டிருக்கும் கார்த்தி அதற்கிடையில் இப்பணிகளையும் மேற்கொள்கிறார்.


‘கதை திரைக்கதை வசனம்’ என்ற பெயரில் புதிய படம் இயக்குகிறார் பார்த்திபன். இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். பார்த்திபன் நடிக்கவில்லையாம்.

Comments