Thursday,21th of February 2013
சென்னை::ராதா மகள் துளசி கூறியதாவது: என் வீட்டில் அம்மா(ராதா), பெரியம்மா (அம்பிகா), அக்கா (கார்த்திகா) எல்லோருமே நடிகைகள். அதனால் என்னைப் பார்ப்பவர்கள், ‘நீ எப்போது நடிகையாகப்போகிறாய்‘ என்று கேட்பார்கள். ‘ஒருபோதும் நான் நடிகையாக மாட்டேன்Õ என்று கூறி வந்தேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும்வரை இப்படி சொல்லிக்கொண்டிருந்தேன். அவரது படத்தில் வாய்ப்பு என்றதும் யார்தான் மறுக்க முடியும். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு 2 மாதம் முன்னே நான் சென்னையில்தான் தங்கி பயிற்சி பெற்றேன். நடிப்பு, நடனம், ஜிம் என தினமும் இடைவிடாமல் பயிற்சி. சில சமயம் இரவு வெகு நேரத்துக்கு பிறகும் ஒத்திகை தொடரும். எனக்கு துணையாக என் குடும்பத்திலிருந்து அம்மா உள்பட யாருமே வரவில்லை.
மணிரத்னம் பார்வையில் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு ஒன்றுதான் இதற்கு காரணம். என்னுடைய குடும்பமே நடிப்பு துறையில் இருந்தபோதிலும் ஒருவர் கூட எனக்கு எந்த யோசனையும் கூறவில்லை. அதற்கு காரணமும் மணிரத்னம் எனது குருவாக அமைந்ததுதான். தற்போது ‘யான்Õ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்து வருகிறேன். என் அக்கா கார்த்திகா அறிமுகமான ÔகோÕ படத்தின் ஹீரோ ஜீவா. பல வருடம் சினிமாவில் நடித்த அனுபவம் ஜீவாவுக்கு இருக்கிறது. இதனால் எனக்கும் நடிப்பில் டிப்ஸ் கொடுப்பார். ஷூட்டிங் இடைவெளியில் இருவரும் பேசும்போது அந்த பேச்சு கார்த்திகாவை சுற்றியே இருக்கும். வேறு ஏதாவதுபேசினாலும் கடைசியில் கார்த்திகா பற்றிய பேச்சாகவே முடியும். இவ்வாறு துளசி கூறினார்.
Comments
Post a Comment