Monday,18th of February 2013
சென்னை::சிறு சிறு வேடங்களில் நடிக்கும் நடிகர் பாலு ஆனந்த். இவர்தான் பவர் ஸ்டார் நடிப்பில் ஆனந்த தொல்லை படத்தை இயக்கியவர். இவர் தற்போது சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை இயக்கி வருகிறார். சத்யா ஹீரோவாகவும், மித்ரா குரியன் ஹீரோயினாகவும் நடித்து வந்தார்கள். மித்ரா குரியன் விஜய் நடித்த காவலன் படத்தில் நான்தான் டெலிபோன் காதலி என்று பொய்சொல்லி விஜய்யை திருமணம் செய்து கொள்வாரே அவர்தான். இப்போது மலையாளத்தில் பிசியான நடிகை.
சந்தித்ததும் சிந்தித்ததும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நாமக்கல் பகுதியில் நடந்து வந்தது. அப்போது நாமக்கல் மலையில் உள்ள ஒரு அருவியில் மித்ரா அரைகுறை ஆடையுடன் குளிக்கும் காட்சியை படம்பிடிக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலு ஆனந்த். பாடல் காட்சியின் இடையில் வரும் சீன் இது. இந்தக் காட்சிக்கான ஆடையை பார்த்துதும் அரண்டு விட்டார் மித்ரா. "இப்படியெல்லாம் சீன் இருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே. நான் பேமிலி ஆடியன்ஸ் நடிகை இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார் தொடர்ந்து இயக்குனர் வற்புறுத்தவே நடிக்க மறுத்து ஊருக்கே திரும்பிச் சென்று விட்டார் மித்ரா. இந்த தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கிறது.
இதுபற்றி இயக்குனர் பாலு ஆனந்த் கூறியிருப்பதாவது "முழு கதையும் கேட்டுவிட்டுத்தான் மித்ரா குரியன் நடிக்க ஒப்புக் கொண்டார். அவருக்கு 6 லட்சம் சம்பளம் பேசி, ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. நாமக்கல்லில் நடந்த படப்பிடிப்புக்கு அவர் கேராளவில் இருந்து வந்தார். இரண்டு நாட்கள் நடித்தார். குளியல் காட்சியில் நடிக்கச் சொன்னபோது, கதை சொன்னபோது குளியல் காட்சி பற்றி சொல்லவில்லை நான் இனி நடிக்க மாட்டேன் என்று சொல்லிச் சென்று விட்டார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது டில்லி மாடல் அழகி யுதாஷா என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளோம்" என்றார்.
இதுகுறித்து மித்ரா குரியனிடம் கேட்டபோது "அந்தப் படத்தில் நடிக்க பிடிக்கவில்லை. அதனால் நடிக்கவில்லை. இதற்கு மேல் அதுபற்றி பேச எதுவுமில்லை" என்றார்.
Comments
Post a Comment