Sunday,3st of February 2013
சென்னை::பேராண்மை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான தன்ஷிகா, அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கமர்ஷியல் படங்களில் நடித்த அவருக்கு வசந்தபாலன், இயக்கிய 'அரவாண்' படத்தில் வாய்ப்பு கிடைத்ததுமே, அந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிப்பார் என்றுதான் எதிர்ப்பார்க்கபப்ட்டது.
அவரும், அப்படத்திற்காக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் ரொம்பவே நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் ஏமாற்றமடைந்த தன்ஷிகா, தற்போது பாலாவின் 'பரதேசி' படத்தை நம்பிக்கொண்டிருக்கிறார்.
பரதேசியில் இரண்டு ஹீரோயின்களில் தன்ஷிகாவும் ஒருவர். பாலா படம் என்றால் அதில் நடிகர், நடிகைகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் இருக்கும், அதேபோல அவர்களிடம் உள்ள திறமையும் வெளிப்படும் என்பதால், இதில் தன்ஷிகாவின் நடிப்பை பார்த்து அனைவருமே அசந்துப்போவார்களாம். அந்த அளவுக்கு தனது திறமையை நிரூபித்திருக்கும் தன்ஷிகா, 'பரதேசி' படத்தை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாராம்.
இந்த முறையாவது ஜக்கம்மா அவருக்கு கை கொடுக்கட்டும்.
Comments
Post a Comment