Saturday,16th of February 2013
சென்னை::கிளாமர் காட்டினால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்’ என்கிறார் ஓவியா. ‘களவாணி’ படத்தில் நடித்தவர் ஓவியா. அவர் கூறியதாவது: ஒரு நடிகையாக கிளாமர் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சினிமாவில் அதுவும் ஒரு அங்கம். பல நடிகைகள் கிளாமர் வேடங்களில் நடிக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியாக நானும் இருக்கிறேன். இன்றைக்கு போட்டி அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு வாரமும் புதுமுக ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டி ருக்கின்றனர். இந்த போட்டிக்கு ஈடுகொடுத்து நான் நிற்பது அதிர்ஷ்டம்தான். இது இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். ஆரம்ப காலத்தில் சினிமாவில் அறிமுகமானபோது நடிகைகளுக்கான ‘பேஷன்’ என்ன என்பது எனக்கு தெரியாது.
நடிகையானபின் அதுபற்றி தெரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் நடைமுறையில் இருக்கும் பேஷன் டிசைன், மேக்கப் என எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறேன். அதற்கு முக்கியத்துவமும் தருகிறேன். ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தில் பிளஸ் 2 மாணவியாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி’ படத்தில் நடித்தபோது அந்த படம் ஓடும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தபோதுதான் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். எனது படங்களில் காமெடியில் நான் சிறப்பாக நடிப்பதாக சொல்கிறார்கள். உண்மையில் அப்படி நடிப்பது கடினம். அதுபோல் சவாலான வேடங்களிலும் நடிக்க ஆசை. தற்போது ‘மூடர் கூடம்’ மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன்.
Comments
Post a Comment