Monday,4st of February 2013
சென்னை::மணிக்கணக்கில் இணை பிரியாமல் பேசிக்கொண்டிருந்த சித்தார்த்-சமந்தா ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது. ‘நான் ஈ, ‘நீ தானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்தவர் சமந்தா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,‘தனக்கு ஒரு காதலன் இருக்கிறார் என்றார். ஆனால் காதலன் யார் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். அவரது காதலன் சித்தார்த்தான் என்று திரையுலகில் கிசுகிசு எழுந்தது. தெலுங்கில் ‘ஜபர்தஸ்த் என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் ஆடியோ ரிலீஸ் ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
சித்தார்த், சமந்தா மற்றும் திரையுலகினர் கலந்துகொண்டனர். முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாவில் சித்தார்த்-சமந்தா நெருக்கமாக அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர். அருகில் இருப்பவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் மெய்மறந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் கவனம், இந்த ஜோடி மீது பதிந்தது. இதை அங்குவந்திருந்த புகைப்படக்காரர்களும் மீடியாக்காரர்களும் சூழ்ந்து நின்று படம்பிடித்த வண்ணம் இருந்தனர். இந்த சம்பவம், சித்தார்த்-சமந்தா காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கு பலம் சேர்ப்பதாக விழாவுக்கு வந்த திரையுலகினர் பேசிக்கொண்டனர்.
Comments
Post a Comment