Friday,15th of February 2013
சென்னை::ஹன்சிகா தமிழில் அறிமுகமானது தனுசுடன்தான். அவர் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம்தான் கோடம்பாக்கத்துக்கு வந்தார். அதனால் அதை மனதில் கொண்டு தனுஷைக்கொண்டு தான் இயக்கும் நையாண்டி படத்தில் நடிப்பதற்காக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் களவாணி, வாகைசூடவா படங்களின் இயக்குனரான சற்குணம். ஆனால் முதலில் தனுசுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி கதையைகூட கேட்டாராம் ஹன்சிகா. கதைக்கேட்டு முடித்ததும் எனது கேரியரில் புதுமையான கேரக்டராக இது இருக்கும் என்று தனது வியப்பை வெளிப்படுத்தி விரைவில் கால்சீட் தேதியை சொல்வதாக நம்பிக்கை வாக்குறுதி அளித்திருக்கிறார்.
அதனால் அதற்கு முன்பு வரை சமந்தா, அமலாபாலை மைண்டில் வைத்து ஸ்கிரிப்ட் பண்ணியிருந்த சற்குணம், ஹன்சிகாவின் வாக்குறுதியை நம்பி அவருக்காக காட்சிகளில் சில மாற்றங்களைகூட செய்து வைத்திருக்கிறார். ஆனால் திடீரென்று ஒருநாள் அவருக்கு போன்போட்ட ஹன்சிகா, இப்போது என் கைவசம் 4 படங்கள் உள்ளது. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் இந்த படங்களில் நடித்து வருகிறேன். அதனால் என்னால் மொத்தமாக கால்சீட் தரமுடியாது. நான்கு நாள், 5 நாள் என்று பிச்சி பிச்சிதான் தர முடியும் என்று சொன்னாராம். இதுபற்றி தனுசிடம் சொன்னபோது, ஹன்சிகாவுக்காக நம்முடைய ப்ளானை மாற்ற வேண்டாம். நமக்கு ஒத்து வருகிற நடிகை யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று சொன்னாராம். அதையடுத்து கல்யாணம் என்கிற நிக்காஹ் என்ற படத்தில் நடித்து வரும் நஸ்ரியா நசீம் என்ற புதுவரவு நடிகையை புக் பண்ணி நையாண்டி படப்பிடிப்புக்கு சென்று விட்டார் சற்குணம்.
ஆனால் திடீரென்று இப்படி ஹன்சிகா காலைவாரியது ஏன்? என்று அவர்கள் விசாரிக்கையில், எல்லாம் சிம்பு செய்த வேலைதான். அவர்தான், தனுஷ் படம் என்றதும் நடிகையை பிரைன்வாஷ் செய்து அந்த படத்தில் நடிக்க விடாமல் செய்து விட்டார் என்பது தெரியவந்ததாம்.
Comments
Post a Comment