ஆர்யாவை அரவணைத்த டாப்சி!!!

Thursday,7th of February 2013
சென்னை::சமீபகாலமாக ஆர்யாவைக்கண்டாலே அலறிக்கொண்டு ஓடுகிறார்கள் நடிகைகள். காரணம், அவருடன் நலம் விசாரிக்கும் தொனியில் பேசினால்கூட அது கிசுகிசுவாகி விடுகிறது. இதனால் அந்த நடிகை ஆர்யா ஆள் என்று மற்ற நடிகர்கள் அவர்களை ஓரங்கட்டுவதும் நடக்கிறது. அதன்காரணமாகத்தான் ஆர்யா எதிரில் வருகிறார் என்றாலே எக்குத்தப்பாக ஓடுகிறார்கள் நடிகைகள். குறிப்பாக, நயன்தாராகூட, பிரபுதேவாவை பிரிந்த நேரத்தில் ஆர்யாவின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தார். ஆனால் அதையடுத்து ஆர்யா-நயன்தாரா ஜோடி சேர்ந்து விட்டதாக அப்போது காட்டுத்தீயாய் செய்திகள் பரவின. அதனால், ஆர்யாவின் நட்பு, சினிமா மார்க்கெட்டை சீர்குலைத்து விடும் என்று உஷாரான நயன்தாரா அவரை கட் பண்ணி விட்டார்.

இதனால் எந்நேரமும் தனக்கு கம்பெனி கொடுப்பதற்காக நல்ல நடிகையாக தேடிக்கொண்டு அலைந்தார் ஆர்யா. அப்போது பார்த்து விஷ்ணுவர்தன் இயக்கும் படவாய்பபு கிடைக்க, அப்படத்தில் தனக்கு ஜோடியாக அமைந்த டாப்சியிடம் அன்பு மழை பொழிந்தார். அவரும் தமிழில் தனக்கொரு சரியான கொளுகொம்பு வேண்டும் என்ற தேடிய நேரம் என்பதால், பட்டென்று அவர் மீது படர்ந்து கொண்டார். விளைவு, இப்போது இருவரும் ஸ்பாட்டில் எந்நேரமும் கடலை போடுவதோடு நில்லாமல், சென்னையிலுள்ள ஒரு பிரதான ஸ்டார் ஹோட்டலின் நீச்சல் குளத்துக்கும் அடிக்கடி சென்று மனம் விட்டு பேசியபடியே ஹாயாக நீந்திக்குளிக்கிறார்களாம். மேலும தற்போதைக்கு தனக்கு கிடைத்த ஒரே தோழி என்பதால், டாப்சிக்காக தனது பர்சை கண்டபடி கரைக்கிறாராம் ஆர்யா.

Comments