Friday,1st of February 2013
சென்னை::ரஞ்சித் இயக்கும் மலையாள படத்தில், நடிக்க ஒப்பந்தமான ஹீரோயின் விலகிவிட்டதால், அந்த கேரக்டரில் கார்த்திகா நடிக்கிறார். ‘கோ’ நாயகி கார்த்திகா, தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அருண் விஜய் ஜோடியாக ‘டீல்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ரஞ்சித் இயக்கும் மலையாள படம் ஒன்றில் நடிகை அன் அகஸ்டின் ஹீரோயினாக நடிக்க தேர்வானார். திடீரென்று அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார். ‘வேறு படங்களில் நடிப்பதாலும் சில சொந்த வேலை காரணமாகவும் இப்படத்தில் நடிக்க முடியாது’ என்று கூறிவிட்டார்.
இந்த வேடத்தில் கார்த்திகா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘இயக்குனர் ரஞ்சித் தனது படத்தில் நடிக்க கேட்டார். ஏற்றுக்கொண்டேன். ஆனால் இன்னும் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக முடியவில்லை. அது முடிந்த பிறகுதான் ஷூட்டிங் எப்போது என்று தெரியவரும். இதற்கிடையே, கன்னட படம் ஒன்றில் நடிக்கிறேன். இப்படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறேன்’ என்றார் கார்த்திகா. அன் அகஸ்டின் விரைவில் ஒளிப்பதிவாளர் ஜோமன் டி ஜான் என்பவரை மணக்க உள்ளாராம். இதற்காகவே அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment