Sunday,24th of February 2013
சென்னை::நடிகர் விஜயின் மனேஜராகவும், மக்கள் தொடர்பாளராகவும் இருந்து பிறகு தயாரிப்பாளராக உயர்ந்த பி.டி.செல்வகுமார், தற்போது 'ஒன்பதுல குரு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வினய், பிரேம்ஜி, லக்ஷ்மிராய், சத்யன், சோனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தை காஸ்மோ & பாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
விஜய் தலைமையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. முழுக்க முழுக்க காமெடி, காதப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த கே இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் 'வா மச்சி வா...' என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பட் ஹிட் பாடலாக உருவெடுத்துள்ளது. ரசிகர்கள் மட்டும் இன்று திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு ரசிகர்களாகியிருக்கிறார்கள். ஜீவா, பிரேம்ஜி, சந்தானம், திரிஷா உள்ளிட்ட ஏராலமான கலைஞர்கள் தற்போது வா மச்சி வா... என்று தான் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படாலின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்பதுல குரு படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று, என்றென்றும் புன்னகை படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. இதில் நடிகை திரிஷா டீசரை வெளியிட அதை சந்தானம் மற்றும் வினய் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அஹ்மத், நடிகர் நாசர் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
Comments
Post a Comment