Tuesday,5th of February 2013
சென்னை::ஏஜிஎஸ் படம் மூலம் வைகைப் புயல் வடிவேலுவின் மறுபிரவேசம் பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா... இதோ இப்போது அவரது அடுத்த படம் குறித்த புதிய தகவல்கள்.
இந்தப் புதிய படமும் சரித்திர சம்பவங்களை வைத்துதான் எடுக்கப்படுகிறது. இதில் அவர் ஏற்கும் வேடம் எவர்கிரீன் தெனாலிராமன். தெனாலிராமன் இருந்தால், கிருஷ்ணதேவராயரும் இருக்க வேண்டுமல்லவா... அந்த வேடத்திலும் வடிவேலுதான் நடிக்கிறார்.
இதன் மூலம் இரண்டாண்டு இடைவெளியை வட்டியும் முதலுமாக சேர்த்து சரிகட்டப் போகிறார் வடிவேலு.
படத்தை இயக்குபவர் யுவராஜ். சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட்டை மையமாக வைத்து போட்டா போட்டி என்ற படத்தை காமெடியாகத் தந்த அதே யுவராஜ்தான்.
இம்சை அரசனைப் போல புத்திசாலித்தனமான சடையர் ஆக உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கதையைக் கேட்டு வடிவேலு மகிழ்ந்துபோய், இவரை இயக்குநராக சிபாரிசு செய்தாராம்...
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி (ஒதுக்கப்பட்டு) இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் எடுத்துள்ளார்.
ஆண்டு முழுவதும் பிஸியாக சுழன்றுகொண்டிருந்த வடிவேலு, கடந்த இரண்டு ஆண்டுகளில் வடிவேல் நடிப்பில், வெறும் இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது. அந்தப் படங்களும் அவர் ஏற்கனவ ஒப்பந்தமான படங்கள்.
இந்த நிலையில், தற்போது தொடர்ந்து மூன்று படங்களில் வடிவேலு ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்பு தேவனின் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் திரைப்படத்திலும், ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கும் வடிவேலு, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Comments
Post a Comment