தமிழ் நடிகைகளுடன் போட்டிக்கு வரும் பாலிவுட் ஹீரோயின்!!!

Tuesday,26th of February 2013
சென்னை::கோலிவுட் ஹீரோயின்களுக்கு போட்டியாக வருகிறார் மற்றொரு பாலிவுட் ஹீரோயின் பிரணிதி சோப்ரா. ‘இஷ்க்ஸாதே என்ற இந்தி படத்தில் நடித்தவர் பிரணித¤ சோப்ரா. இவர் தமிழில் உருவாகும் ‘சும்மா படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோவாக நடிப்பதுடன் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறார் மதன். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன். மதன் கூறும்போது, ‘காடுகளுக்குள் புதைந்திருக்கும் பல ரகசியம் வெளியுலகுக்கு தெரிவதில்லை. அதை அம்பலமாக்கும் கதைதான் இது. இந்தியில் வெற்றிபடத்தில் நடித்த பிரணிதி சோப்ரா ஹீரோயின். மற்றொரு ஹீரோயினும் நடிக்க உள்ளார்.

இவர்களுடன் சுமன் ஷெட்டி, சேஷு, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் ஒளிப்பதிவு. ஆர்.தயாளன் இசை. எஸ்.எஸ்.எஸ் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் தேனி, குரங்கணி மற்றும் அச்சங்கோவில், தலக்கோணம், காளஹஸ்தி என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்துக்கு ‘சும்மா என டைட்டில் வைத்ததற்கு காரணம் காடுகளில் புதைந்திருக்கும் ரகசியம்போல் இந்த டைட்டிலிலும் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது என்பதை உணர்த்தத்தான்‘ என்றார்.

Comments