Wednesday,20th of February 2013
சென்னை::நடிகை பூர்ணாவுக்கு, கோலிவுட்டில் முதல் ரவுண்டு, அத்தனை சிறப்பாக இல்லையென்றாலும், இரண்டாவது ரவுண்டில், அதிக படங்களில் நடிப்பதால், உற்சாகமாக இருக்கிறார். இந்த படங்களில், அவருக்கு வெயிட்டான கேரக்டராம். ஆனாலும், கோலிவுட்டை விட, டோலிவுட்டில் தான், அவரது கவனம் அதிகமாக பதிந்துள்ளது. அதனால், தெலுங்கு படங்களில், மிகவும் ஈடுபாட்டுடன் நடிக்க முடிவு செய்துள்ளாராம். பூர்ணா, கேரளாவைச் சேர்ந்தவர். தெலுங்கில் பேசினால், புரிந்து கொள்வாரே தவிர, அவரால், தெலுங்கில், தெளிவாக மாட்லாட முடியாது. தெலுங்கு திரையுலகில், ஒரு முக்கிய இடத்தை பிடிக்க விரும்பும், பூர்ணா, வசனங்களை புரிந்து பேசினால் தான், ஈடுபாட்டுடன் நடிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால், விரைவிலேயே, தெலுங்கு கற்க போகிறாராம்.
Comments
Post a Comment