இரட்டை பலத்துடன் மீண்டும் களம் இறங்குகிறார் வடிவேலு!!!

Friday,15th of February 2013
சென்னை::தமிழ் சினிமாவின் காமெடி ஏரியாவை பல ஆண்டுகளாக தனது கண்ட்ரோலில் வைத்திருந்த வடிவேலுவின் சினிமா வாழ்க்கை கடந்த சில ஆண்டுகள் என்ன நிலை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது மீண்டும் களம் இறங்க காத்திருந்த வடிவேலு இந்த முறை இரட்டை பலத்துடன் களம் இறங்குகிறார்.

இரட்டை என்றவுடன் அரசியல் பற்றி யோசிக்க வேண்டாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தெனாலி ராமன் என்ற படத்தில் ஒப்பந்தாமியிருக்கும் வடிவேலு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார்.

பட்டா பட்டி பட இயக்குநர் யுவ்ராஜ் இப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது

Comments