Tuesday,26th of February 2013
சென்னை::வேதிகா போல் கன்னட படத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார் பானு. ‘தாமிரபரணியில் நடித்த பானு தற்போது ‘மூன்றுபேர் மூன்று காதல்‘ உள்ளிட்ட 2 படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் ‘பிருந்தாவனா‘ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார் வேதிகா. ஆனால் திடீரென்று அவரை நீக்கிவிட்டு ஹீரோயினாக பானு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கன்னடத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் இருந்த பானுவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டுள்ளது. தற்போது பானுவும் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இது பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச மூர்த்தி கூறும்போது, ‘இப்படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க பானுவை தேர்வு செய்தோம். அவர் தற்போது தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
அப்பட தயாரிப்பாளரிடம் பானுவின் கால்ஷீட்டை எங்களுக்கு அட்ஜஸ்ட் செய்து தரும்படி கேட்டோம். மறுத்துவிட்டார். இதையடுத்து பானுவுக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்கிறோம். அவர் ஒரு கன்னட பெண் என்றார். படத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தகவல் மீடியா மூலம் பானுவுக்கு தெரியவந்தது. இதுபற்றி அவர் கூறும்போது, ‘இப்படத்தில் நடிக்க கேட்டபோதே நான் நடித்து வரும் தமிழ் படங்கள் பற்றி தெரிவித்தேன். அதற்கு சம்மதித்துதான் ஒப்பந்தம் செய்தார்கள். இதற்காக தமிழ் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பைகூட ஏற்க மறுத்தேன். ஆனால் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக மீடியாக்களில் தெரிவித்துள்ளனர். என்னை தூக்கி எறிந்துள்ளனர். இது தொழில் விரோத செயல். ஏற்கனவே இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட வேதிகாவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இந்த சம்பவம் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.
Comments
Post a Comment