ஆர்யாவுக்கு ஜோடியாகும் சமந்தா!!!

Thursday,28th of February 2013
சென்னை::முன்தினம் பார்த்தேனே‘, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். மெகா பட்ஜெட் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக உருவாக்க உள்ளனர்.

நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் கதையை அமைத்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். தற்போது, இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கும் பணியில் இயக்குனர் இறங்கியிருக்கிறார்.

மேலும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

Comments