தமிழை விட தெலுங்கு சினிமாவுகே முன்னுரிமை - நடிகை காஜல் அகர்வால்

Sunday,10th of February 2013
சென்னை::தமிழை காட்டிலும் தெலுங்கு சினிமாவுக்கே நான் முன்னுரை அளிப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது கார்த்தியுடன் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' எனற ஒரு தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, "தமிழைக் காட்டிலும் தெலுங்குப் படங்களுக்கு தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறேன்." என்று கூறிய அவர், இது தொடர்பாக மேலும் கூறுகையில், "தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. நான் தமிழைவிட தெலுங்கு திரையுலகிற்குதான் முன்னுரிமை அளிக்கிறேன். ஏனென்றால் அங்குதான் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் நடிகைகளுக்கு மரியாதை இல்லை. இங்கு கதாநாயகர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். நான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்." என்றார்.

Comments