Saturday,2st of February 2013
சென்னை::சமீபகால சினிமாவில் உசிரைக்கொடுத்து நடிப்பவர்களை விட உதட்டு முத்தக்காட்சியில் நடிப்பவர்கள்தான் பரபரப்பாக பேசப்படுகிறார்கள். அதனால் பல நடிகைகள் அந்த விசயத்தில் கூடுதல் அக்கறை காட்டுகின்றனர். இதைப்பார்த்த டாப்சியும இப்போது முத்த நடிகையாக மாறியிருக்கிறார். தன்னுடன் நடிப்பது எந்த நடிகர் என்ற பிரச்னை இல்லை. ஆனால் கதைக்கு எந்த அளவுக்கு நெருக்கமாக நடிக்க வேண்டுமோ, எந்த மாதிரியான முத்தம் கொடுக்க வேண்டுமோ அதற்கெல்லாம் நான் ரெடி என்று இயக்குனர்களுக்கு சூசக அறிக்கை விட்டுள்ளார்.
அதையடுத்து, தற்போது ஆதிக்கு ஜோடியாக டாப்சி நடித்து வரும் மறந்தேன் மன்னித்தேன் படத்தில் வலுக்கட்டாயமாக ஒரு உதட்டு முத்தக்காட்சியை இணைத்தனர். மிருகம் ஆதியும் தனது பாணியில் டாப்சியின் உதடு கவ்வ, டாப்சியும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். இந்த முத்தம் தன்னை பெரிய அளவில் பேச வைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்தார் டாப்சி. ஆனால் சென்சார்போர்டு அதிகாரிகள், அந்த காட்சி ஆபாசத்தை தூண்டுவதாக இருப்பதாக சொல்லி கத்திரி வைத்து விட்டார்களாம். இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் டாப்சி. இருப்பினும் அடுத்தடுத்து உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பான நடிகை என்ற பட்டியலில் இடம் பிடிக்காமல் அடங்க மாட்டேன் என்று சொல்லி தன்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களிடம தனது ஆவலை சொல்லி முத்தக்காட்சி வைக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்.
Comments
Post a Comment