Wednesday,27th of February 2013
சென்னை::சுந்தர்.சி. இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா நடிக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் ஷூட்டிங் கும்பகோணம், ஐதராபாத், சென்னையில் நடந்துள்ளது. 2 பாடல் காட்சிகள் ஜப்பானில் படமாகி உள்ளது.
‘எதிர்நீச்சல் பட ஷூட்டிங் முடிந்தது. சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். ஷூட்டிங் முடிந்த கையோடு இதன் இறுதிகட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘பூ பார்வதி தனுஷ் ஜோடியாக ‘மரியான் படத்தில் நடிக்கிறார். கறுத்த உருவம், கிராமத்து பெண் என ‘பூ படத்தில் நடித்தவர், இதில் நவநாகரீக உடையில் கலக்கி இருக்கிறாராம்.
இன்னமும் ஸ்ரீதேவிதான் வேதிகாவின் கனவு கன்னி. தனது நடிப்புக்கு அவரை ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டிருக்கும் வேதிகா சமீபத்தில் ஒரே விமானத்தில் ஸ்ரீதேவியுடன் வந்ததை மகிழ்ச்சி பொங்க சொல்லி பூரிக்கிறார்.
*‘ஆயிரத்தில் ஒருவன்Õ, ‘மின்னலேÕ உள்ளிட்ட படங்களில் நடித்த ரீமா சென்னுக்கு சமீபத்தில் மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது கணவர் சிவ் கரண் சிங் உடனிருந்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
*‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘ ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ரவுத்ரம்‘ பட இயக்குனர் கோகுல் டைரக்ட் செய்கிறார். இதில் சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சேதுபதி.
*ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2‘ படத்தில் நடிக்கும் சூர்யா அடுத்து ‘சுப்ரமணியபுரம்‘ சசிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
*‘காசி‘ உள்ளிட்ட படங்களில் நடித்த காவ்யா மாதவனின் ரசிகர் விஜீஷ் என்பவர் சமீபத்தில் அவரை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். எந்த புத்தகம் அல்லது இணையதளத்தில் காவ்யாவின் போட்டோவை பார்த்தாலும் அதை சேகரித்துவிடுவார். இதுபோல் 50 ஆயிரம் புகைப்படங்களை சேகரித்து ஆல்பமாக தயாரித்தவர், சமீபத்தில் காவ்யாவிடம் அதை நேரில் பரிசாக அளித்தார்.
*திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மீனா மலையாளத்தில் 5 ஹீரோயின்களை மையமாக வைத்து உருவாகும் படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு ‘வலை என பெயரிடப்பட்டது. ஆனால், இப்படத்தின் பெயர் மாறக்கூடும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறி இருக்கிறார்.
விமல், ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘ரெண்டாவது படம் படத்திற்கான ஒரு பாடல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. கண்ணன் இசையமைத்துள்ளார்.
‘இளம் வயதில் வருடத்துக்கு ஒரு படத்துடன் முடித்துக்கொள்ளாமல் முடிந்தளவுக்கு மாறுபட்ட வேடங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படங்களிலும் நடிக்கப்பாருங்கள்‘ என ரஜினி கூறிய அறிவுரைப்படி வரும் ஆண்டுகளில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் கார்த்தி.
‘கிரீடம்‘ விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தலைவா‘ படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ராகினி நந்தவானி நடிக்கிறார். இதில் அமலா பால் மற்றொரு ஹீரோயின்.
Comments
Post a Comment