Monday,2th of February 2013
சென்னை::சோனியா காந்திபோல் காஸ்டியூம் அணிந்து நடிக்கிறார் பிரியாமணி. தெலுங்கில் உருவாகும் ‘சாண்டி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் பிரியாமணி. இதன் கதை சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது. சமுத்ரா இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. ஷூட்டிங்கிற்கு மேக் அப்புடன் வந்த பிரியாமணியை பார்த்ததும் பலர் ஷாக் ஆனார்கள். பத்திரிகையாளர்கள் அவரை மொய்த்துக்கொண்டு இது என்ன கெட்அப் என்று கேள்விகேட்டு துளைத்தெடுத்தார்கள். இந்த பரபரப்புக்கு காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாணியில் அவர் காஸ்டியூம் அணிந்து அதேபோல் ஹேர் ஸ்டைலுடன் வந்ததுதான். ஆனால் இதுபற்றி பதில் எதுவும் சொல்லாத பிரியாமணி ‘எதுவாக இருந்தாலும் இயக்குனரிடம் கேளுங்கள் என்றார்.
இதையடுத்து ‘இது சோனியா காந்தி வாழ்க்கை படமா? முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை பற்றிய படமா? என்று இயக்குனரிடம் சரமாரியாக கேட்டனர். இது பற்றி சமுத்ரா கூறும்போது, ‘எங்கள் படம் அரசியல் தொடர்புடையதுதான். சிலரின் வாழ்க்கையை முன்னுதாரணமாககொண்டு ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. தனது அண்ணன் எதிர்பாராதவிதமாக கொலை செய்யப்படுகிறார். இதனால் கட்சியின் எதிர்காலத்தையும், தொண்டர்களையும் காப்பாற்ற தங்கை கட்டாயமாக அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று கதை செல்கிறது. அரசியல் பழிவாங்கும் கற்பனை கதைதான். அரசியலை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. ஆட்சியை கைப்பற்ற சிலர் எந்த எல்லைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் எப்படி சவாலாக இருக்கிறார் என்பதை பரபரப்பாக சொல்ல இருக்கிறேன் என்றார்.
Comments
Post a Comment