Wednesday,27th of February 2013
சென்னை::சொந்தமாக யோசித்து படம் தயாரிப்பதில்லை என்பதில் ராம.நாராயணனும், சந்தானமும் உறுதியாக இருக்கிறார்கள். முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா பாக்யராஜின் நேற்று இன்று நாளை படத்தின் திருட்டு தழுவல். படம் கோடிகளை அள்ளிக் குவித்ததால் அடுத்த காப்பிக்கு இருவர் டீம் ரெடி.
இந்தமுறை பாலசந்தர் நாகேஷை வைத்து எடுத்த அனுபவி ராஜா அனுபவி படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தமுறை முறையாக அனுமதி வாங்கி படத்தை எடுக்கயிருக்கிறார்களாம்.
காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டே ஹீரோவாகவும் நடிப்பது என்ற முடிவை சந்தானம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையாவைத் தொடர்ந்து மரியாதை ராமண்ணாவின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார்.
அனுபவி ராஜா அனுபவி.
Comments
Post a Comment