Sunday,24th of February 2013
சென்னை::சுந்தர்.சி., இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா. இதில் அவர் மூன்றுவிதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்கிறார். அஞ்சலி, வரலட்சுமி ஜோடி சேரும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பா.விஜய், அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றபோது, அந்த ஸ்பாட்டுக்கே சென்று டியூன் போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது சுந்தர்.சியுடன். இணைந்து விஷாலும் டியூன்களை கேட்டு செலக்ட் பண்ணியிருக்கிறார். கூடவே ஒரு பாடலுக்கு டம்மி வரிகள் போடப்பட்டதும் அதை பாடியும் காண்பித்திருக்கிறார்.
அதையடுத்து, இந்த பாடலை விஷாலையே பாட வைப்போம் என்று கூறியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அதற்கு சுந்தர்.சியும் டபுள் ஓ.கே சொல்ல, சென்னை வந்ததும் தனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு விஷாலை அழைத்து பாட வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்போது, ஏற்கனவே டியூன் அவரது மனதுக்குள் இருந்ததால், "மை டியர் லவ்வரு, டியர் லவ்வரு, நீ சூப்பர் டக்கரு..." என்று தொடங்கும் அந்த பாடலை சுமார் ஒரு மணிநேரத்திலேயே அசத்தலாக பாடிக்கொடுத்திருக்கிறார் விஷால். அதைக்கேட்டு, அவரது உற்சாகமும், ஈடுபாடும் பாடலுக்கு புது எனர்ஜியை கொடுத்திருக்கிறது என்று மதகஜராஜா யூனிட்டே விஷாலை புகழ்ந்து வருகிறது.
இதையடுத்து, யூ டியூப்பில் வெளியிடப்பட்ட அந்த பாடல், ஏராளமான ரசிகர்களின் பேவரிட் பாடலாகவும் மாறிவிட்டதாம். இதையறிந்து செம சந்தோசத்தில் இருக்கிறார் விஷால். அதோடு, இனி எனது குரலுக்கு செட்டாகிற மாதிரியான பாடல்கள் நான் நடிக்கிற படங்களில் அமைந்தால் தொடர்ந்து பாடுவேன் என்றும் கூறுகிறார்.
Comments
Post a Comment