Sunday,3st of February 2013
சென்னை::சேட்டை படத்தில் நடித்திருக்கும் ஆர்யா, நிஜத்திலும் சேட்டைத்தனம் கொண்ட நடிகர் என்பதை அவர் சம்மந்தமாக வரும் கிசுகிசுக்களின் மூலமாகவே ரசிகர்கள் அறிந்துகொண்டிருப்பார்கள். ஆனால், அந்த சேட்டை நடிகர் தனது சேட்டை தனத்தை உடன் நடிக்கும் ஹீரோயின்கள் மட்டும் இன்றி அவர்களுடைய அம்மாக்களிடமு காட்டியிருப்பது தற்போது தெரிந்திருக்கிறது.
ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம் 'சேட்டை'. டெல்லி பெல்லி என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான இப்படத்தை கண்ணன் இயக்க, யுடிவி தயாரித்திருக்கிறது.
தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் டெல்லி பெல்லி படத்தை இயக்கிய இயக்குநர் உள்ளிட்ட டெல்லி பெல்லி படக்குழுவினர்கள் சிறப்பு விருந்தனர்களாக கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடன் ஒரு கேள்வியை கேட்க, அவர்கள் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்கள். அப்படி ரம்யா நடிகை அஞ்சலியிடம் கேள்வி கேட்ட போது, "ஆர்யா சேட்டை படப்பிடிப்பில் உங்களிடம் பேசுவை காட்டிலு உங்க அம்மாவிடம் தான் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பாராமே? என்று கேட்க, அதிரடியாக சிரித்த அஞ்சலி, "ஆமாம் என் அம்மாவோட தான் அதிகமாக பேசிக்கொண்டிருப்பார். அதுமட்டுமல்ல, சுடிதாரே போடாத என் அம்மா கிட்ட, என்ன நீங்க எப்போவுமே புடவையே கட்டுரிங்க, இனிமே சுடிதார் போட்டுட்டு வாங்க, நல்லா மாடர்னா டிரஸ் பண்ணுங்க. இபோதான் காலம் மாறிப்போச்சே. உங்கல அடுத்த தடவை பார்க்குப்போது சுடிதார்லதான் பார்க்கனும். என்று அட்வைஸ் செய்தார்." என்று பதில் அளித்தார்.
அப்போதுதான் புரிந்தது 'சேட்டை' படத்திற்கு ஏற்ற ஹீரோ ஆரியா தான் என்பது.
Comments
Post a Comment