Wednesday,20th of February 2013
சென்னை::பொறுத்தது போதுமென்று, பொங்கி எழுந்து விட்டார், இனியா. கிராமத்து வேடங்களுக்கு தான், நடிக்க லாயக்கு என்ற அடையாளத்தை மாற்ற வேண்டும் என, நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார். அவரது நினைப்பு, இப்போது கை கூடியுள்ளது. புதிதாக நடிக்கும் ஒரு படத்தில், அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடிக்கும் அவர், கவர்ச்சி நடிப்புக்கும் திறப்பு விழா நடத்தி, கமர்சியல் டைரக்டர்களுக்கு, இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார். இனியாவின் இந்த முடிவு, கிளாமர் நாயகிகளுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தாலும், இதுவரை பாராமுகமாக இருந்த, சில இயக்குனர்கள், இனியாவை தேடி படையெடுத்து வருகின்றனர். இந்த திடீர் வரவேற்பால், உற்சாகமடைந்துள்ளார், அவர். இருப்பினும், "கிளாமர் கதைகளை தேர்வு செய்யும்போது, உஷாராக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இனியா, "கவர்ச்சி நடிகை பட்டியலில் என்னை சேர்த்துவிடாத அளவுக்கு, ஆடை குறைப்பு காட்சி வையுங்கள் என்று, டைரக்டர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்.
Comments
Post a Comment