பாலிவுட் ஹீரோயின்கள் மீது கோபம் : தமிழ் நடிகைகளை ஆதரிக்கும் அக்ஷய் குமார்!!!

Thursday,28th of February 2013
மும்பை::பாலிவுட் ஹீரோயின்கள் மீதுள்ள கோபத்தால் தமிழ் நடிகைகளுக்கு தனது படங்களில் வாய்ப்பளிக்கிறார் அக்ஷய் குமார். ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர்கானுக்கு அடுத்தபடியாக பாலிவுட்டில் அஜய் தேவ்கன், அக்ஷய்குமார், ஹிரித்திக் ரோஷன் ஆகியோர் முன்னணி ஹீரோக்களாக உள்ளனர். இதில் அக்ஷய்குமார் ஆரம்ப காலத்தில் முன்னணிக்கு வர கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். அப்போது பல பாலிவுட் ஹீரோயின்கள் அவருக்கு ஜோடி சேர மறுத்தனர். ஹீரோயின்களுடன் நெருங்கி பழகி கிசு கிசுக்களில் சிக்கியதாலும் பல ஹீரோயின்கள் அக்ஷயை கண்டு ஒதுங்கிப்போனார்கள். இதனால் முடிந்தவரை தனது படங்களில் புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது தமிழ் நடிகைகள் பாலிவுட்டில் அறிமுகமாகி வருகிறார்கள். அதனால் பாலிவுட் ஹீரோயின்களுக்கு பதிலாக தமிழ் நடிகைகளை தனது படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறாராம் அக்ஷய் குமார். ஹவுஸ்புல் 2, கில்லாடி 786 என அடுத்தடுத்து 2 படங்களில் அக்ஷய்க்கு ஜோடியாக அசின் நடித்தார். சமீபத்தில் வெளியான அவரது ஸ்பெஷல் 26 படத்தில் காஜல் அகர்வால் நடித்தார். இப்போது டிப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தனக்கு ஜோடியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்ய அக்ஷய்குமார் உத்தரவு போட்டாராம். இதையடுத்து தமன்னா இதில் ஒப்பந்தமாகியுள்ளார். அக¢ஷய் நடித்த Ôகட்டா மிட்டா படத்தில்தான் த்ரிஷா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments