திடீர் உடல் எடை குறைத்தது ஏன்? : மம்தா விளக்கம்!!!

Tuesday,5th of February 2013
சென்னை::மம்தா மோகன்தாஸுக்கு திடீரென்று உடல் எடை குறைவதால் உடற்பயிற்சியை கைவிட்டார். ‘சிவப்பதிகாரம், ‘குரு என் ஆளு, ‘தடையற தாக்க படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். சமீபகாலமாக படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடிப்பது பற்றி பேச்சு நடக்கிறது. மீண்டும் நடிக்க வந்ததால் ஒல்லியான தோற்றத்துக்காக உணவு கட்டுப்பாடு, ஜிம் என தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அவரது உடல் எடை அதிக அளவில் குறைய ஆரம்பித்தது. இதையடுத்து அவர் உடற்பயிற்சி, உணவு கட்டுபாட்டை நிறுத்தினார். இது பற்றி மம்தா கூறும்போது, ‘கடந்த ஒரு மாதமாக உடற்பயிற்சியை முழுமையாக நிறுத்திவிட்டேன். அதிகப்படியான உடல் எடை குறைந்ததுதான் காரணம். சில மாதங்களுக்கு முன்தான் நான் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்தேன். எடை குறைப்புக்கும் டயட்டில் இருந்தேன். இதற்கு முன் ஏற்படாத அளவுக்கு இப்போது திடீரென எடை குறைந்திருக்கிறேன் என்றார். இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற உள்ளாராம் மம்தா.

Comments