Friday,15th of February 2013
சென்னை::புதிய படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவது பற்றி திவ்யா குழப்பமான பதில் அளித்திருப்பதால் இயக்குனர் ஷாக் ஆகி இருக்கிறார். வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. கன்னடத்தில் உருவாகும் ‘நீர் டோஸ்Õ என்ற படத்தில் நடிக்க திவ்யாவிடம் பேசினார் இயக்குனர் விஜய பிரசாத். நடிப்பதாக திவ்யா ஒப்புக்கொண்டதையடுத்து மற்ற பணிகளில் ஈடுபட்டார் இயக்குனர். திடீரென்று படத்திலிருந்து விலகுவதாக திவ்யா அறிவித்தார். இதைகேட்டு இயக்குனர் ஷாக் ஆனார். படத்தில் நடிக்க அட்வான்ஸ் எதுவும் தராததால் அதிலிருந்து திவ்யா விலகியதாக தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அட்வான்ஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து ‘நீர் டோஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இதில் நிம்மதி அடைந்த இயக்குனருக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று திவ்யா தனது டுவிட்டர் பக்கத்தில்,‘நீர் டோஸ் பட ஸ்கிரிப்ட்டை கேட் டேன். அதில் எனது வேடத்துக்கு நியாயம் செய்து நடிக்க முடியாது என்று கூறியதுடன் அப்படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் படத் தில் அவர் நடிப்பாரா? இல்லையா? என்பது இயக்குனருக்கு புரியாத புதிராக இருக்கிறது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் படத்தின் ஹீரோ ஜக்கேஸ் உள்ளிட்ட அனைவருக்கும் பிடித்திருக்கிறது. திவ்யா நடித்தாலும் நடிக்காவிட்டாலும் இதன் ஷூட்டிங் தொடங்கும். திவ்யாவின் முடிவு எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment