Sunday,24th of February 2013
சென்னை::நடிகர் சந்தானம் லொள்ளு சபா என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். தனது மன்மதன் படத்துக்கு சரியான காமெடியன் வேண்டுமென்று தேடி வந்த சிம்பு, லொள்ளு சபா நிகழ்ச்சியை தற்செயலாக பார்த்தபோது, சந்தானத்தின் நடிப்பு அவரை பாதித்திருக்கிறது. அதனால் உடனே அவரை அழைத்து தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்போது, பெரிய காமெடியன் யாரையாவது நடிக்க வைக்கலாம். இதுமாதிரி புதுமுக நடிகர்களை வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று மன்மதன் யூனிட் நபர்கள் சிம்புவை தடுத்தார்களாம். ஆனால், இந்த பையனின் நடிப்பு நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக இவன் ஒரு பெரிய ரவுண்டு வருவான் என்று அடித்து சொல்லி சந்தானத்தை அறிமுகம் செய்திருக்கிறார் சிம்பு.
அவர் சொன்ன வாய் முகூர்த்தம் இப்போது முன்னணி காமெடியனாகி விட்டார் சந்தானம். ஆனால் அவர் இந்த அளவுக்கு வளருவதற்கு அவரது லொள்ளு சபா காமெடி டீமும் முக்கிய காரணம். அவர்கள்தான் இவருக்காக திரைக்குப்பின்னால் இருந்து ஸ்கிரிப்ட் எழுதி வந்தவர்கள். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு அந்த டீமுக்கும், சந்தானத்துக்குமிடையே விரிசல் விழுந்துள்ளது.
அதனால் லொள்ளு சபா டீமில் இருந்த 12 பேர்களில் இப்போது 9 பேர் தனியே பிரிந்து வந்து விட்டனர். வெறும் 3 பேர் மட்டும் சந்தானத்தின் டீமில் இருக்கிறார்கள. அப்படி சந்தானத்திடமிருந்து பிரிந்து வந்த 9 பேரும் சேர்ந்து இப்போது பெட்ரமாஸ்க் லைட்டே வேணுங்களா என்றொரு காமெடி படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து 3 பேர்களை மட்டுமே தக்க வைத்துள்ள சந்தானம், மேலும் தனது காமெடி இலாகாவுக்கு நல்ல காமெடி ரைட்டர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
Comments
Post a Comment