85-வது ஆண்டு விருது விழா கோலாகலம் : லைப் ஆப் பை படத்துக்கு 4 ஆஸ்கர்!!!


Tuesday,26th of February 2013
சென்னை::லாஸ் ஏஞ்சல்ஸ்::புதுச்சேரி உள்பட உலகின் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்ட ‘லைப் ஆப் பை’ படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சர்வதேச அளவில் உயர்ந்த சினிமா விருதாக கருதப்படுகிறது ‘ஆஸ்கர்’ எனப்படும் ‘அகடமி அவார்ட்ஸ்’ விருது. 85- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாமுவேல் கோல்டுவின் அரங்கில் இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் தொடங்கியது. 7.30 முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘பிரேவ்’ என்ற படம் அனிமேஷன் படத்துக்கான விருது பெற்றது. இதையடுத்து சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது ‘லிங்கன்’ படத்தில் ஆபிரகாம் லிங்கனாக நடித்த டேனியல் டே லூயிசுக்கு வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே ‘மை லெப்ட் ஃபுட்’ மற்றும் ‘தேர் வில் பி பிளட்’ ஆகிய படங்களுக்காக சிறப்பு விருதுகளை வென்றிருக்கிறார். ‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ என்ற படத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ், சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான விருதை அமெரிக்க அதிபர் ஒபாமா மனைவி மிஷெல் ஒபாமா, வெள்ளை மாளிகையில் இருந்தபடி அறிவித்தார். சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘அர்கோ’ தட்டி செல்வதாக அவர் அறிவித்தார். அப்போது அரங்கில் கரவொலி எதிரொலித்தது.

காஸ்டியூம் டிசைனுக்கான விருது ஜேக்லைன் துரான் (அன்னா கரீனினா) பெற்றார். இந்த விருதை பட இயக்குனர் ஜோ ரைட்டுக்கு அர்ப்பணிப்பதாக ஜேக்லைன் கூறினார். ‘லெ மிஸ்ரபல்ஸ்’ படத்தில் பணியாற்றிய லிசா வெஸ்ட்காட் மற்றும் ஜூலி டார்நெட் ஆகியோர் சிறந்த சிகை அலங்கார விருது பெற்றனர். வெளிநாட்டு மொழியில் சிறந்த படத்துக்காக விருதை ஆஸ்திரியாவில் தயாரான ‘அமொர்’ பெற்றது. சிறந்த துணை நடிகர் கிறிஸ்டோப் வால்ஸ் (டிஜாங்கோ அன்செயின்டு), சிறந்த துணை நடிகைக்கான விருதை ‘லெ மிஸ்ரபில்’ படத்தில் நடித்த அன்னா ஹாத்வே பெற்றார். சிறந்த எடிட்டிங் வில்லியம் கோல்டன்பெர்க் (அர்கோ), சிறந்த திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ (அர்கோ). சிறந்த சவுண்ட் எடிட்டிங் மற்றும் சிறந்த பாடலுக்கான விருதை (பாடகி அடில்) டேனியல் கிரெய்க் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கை பால்’ பெற்றது.

லைப் ஆப் பை கதை என்ன?

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட வாலிபர் பைசைன் மாலிட்டர் (பை). இவரது தந்தை மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். மிருகங்கள் மீது பை அன்பாக இருக்கிறான். அங்குள்ள ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெங்கால் புலி மீது பைக்கு அன்பு பிறக்கிறது. அதற்கு உணவு வழங்க முயல்கிறான். அவனது தந்தை அதை தடுப்பதுடன் விலங்குகள் ஆபத்தானவை என்று கூறுகிறார். பைக்கு 16 வயதாகும்போது அவரது குடும்பம் கனடாவுக்கு இடம்பெயர்கிறது. கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் புறப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் சூறாவளியில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் குடும்பத்தினரை இழக்கிறான் பை. அவனை கப்பல் ஊழியர்கள் உயிர்காக்கும் படகில் அனுப்புகின்றனர். அந்த படகில் புலியும் செல்கிறது. கூண்டில் இருந்து தப்பிக்கும் புலி அதே படகில் கிடக்கும் வரிக்குதிரை, உராங்குட்டானை கொல்கிறது. அடுத்தகட்டமாக பை மீது குறி வைக்கிறது. இதில் வாழ்வா சாவா போராட்டத்தை சந்திக்கிறான் பை. பசியால் வாடும் பையும், புலியும் குடிநீருக்காகவும் போராட வேண்டி இருக்கிறது. மழைநீரை பிடித்து அதை குடிநீராக தருகிறான் பை. அத்துடன் கடலில் துள்ளும் மீன்களை பிடித்து உணவாக்குகிறான். அதை புலிக்கும் தருகிறான். மீண்டும் புலி நட்புடன் பழகுகிறது. இவ்வாறு கதை தொடர்கிறது. இப்படத்தை ஆங் லீ இயக்கி உள்ளார். ஹீரோ பை கதாபாத்திரத்தில் 6 வயது, 13 வயது. 16 வயது என 3 காலகட்டங்களில் கவுதம் பெலுர், அயூஷ் டான்டன், சுராஜ் சர்மா நடித்துள்ளனர். இப்படம் 3டியில் உருவாக்கப்பட்டது...

சினிமா துறையில் உயர்ந்த விருதுகாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தை கதை தழுவலை கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான லைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கு, ஆண்டு தோறும், "ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, 85வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட்டில் நகரில் கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இந்தியாவில், புதுச்சேரி மாநிலத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாலிவுட் படமான லைப் ஆப் பை படம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அதுமட்டுமல்லாது பிரபல பின்னணி பாடகி பாம்பே ‌ஜெயஸ்ரீயும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார்.

லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் : ஹாலிவுட் டைரக்டர் ஆங் லீ இயக்கிய லைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபக்ட்ஸ், சிறந்த இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளன.

பாம்பே ‌ஜெயஸ்ரீ ஏமாற்றம் : லைப் ஆப் பை படத்தில் குழந்தையை தலாட்டுவது போன்ற, பாடல் இடம் பெற்றிருந்தது.இந்த பாடலை, பிரபல கர்நாடக இசைப் பாடகியான, பாம்பே ஜெயஸ்ரீ, பாடியிருந்ததுடன், அவரே அந்த பாடலை எழுதியுமிருந்தார். ஒரு தாய், தன் குழந்தையின் அழகையும், சிறப்பையும் புகழ்ந்து பாடுவது போல், அந்த பாடல் எழுதப்பட்டிருந்தது. இந்த பாடலும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மாறாக பிரபல பாப் இசை பாடகி அடிலிக்கு விருது வழங்கப்பட்டது.

டேனியல் டே லூயிஸ் சாதனை : லிங்கன் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்ற டேனியல் டே லூயிஸ் 3வது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1989ம் ஆண்டு மை லைப்ட் புட் என்ற படத்துக்காகவும், 2007ம் ஆண்டு தெர் வில் பி பிளட் என்ற படத்துக்காகவும் விருது பெற்றுள்ளார்.

ஆமோர் சிறந்த வெளிநாட்டு படம் : ஆஸ்திரிய திரைப்படமான ஆமோர் திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

விர* சிறந்த நடிகர் : டேனியல் டே லூயிஸ் (லிங்கன்)


* சிறந்த நடிகை : ஜெனிபர் லாரன்ஸ் (சில்வர் லிங்கின் ப்ளேபுக்ஸ்

* சிறந்த படம் : அர்கோ

* சிறந்த டைரக்டர் : ஆங் லீ (லைப் ஆப் பை)

* சிறந்த ஒளிப்பதிவு : க்ளவுடியா மிராண்டா (லைப் ஆஃப் பை)

* சிறந்த இசை : மைக்கேல் டன்னா (லைப் ஆப் பை)

* சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : பில் வெஸ்டன்கோபர், ‌டொணால்டு ஆர்.எல்லியாட், எரிக் ஜான் டி போர், குலாமி ரொகன் (லைப் ஆஃப் பை)

* சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் (ஜன்கோ அன்செயிண்டு)

* சிறந்த துணை நடிகை : அன்னா ஹாத்வே (லெஸ் மிஸரபல்ஸ்)

* சிறந்த படத்தொகுப்பு : வில்லியம் கோல்டன்பர்க் (அர்கோ)

* சிறந்த வேற்று மொழி படம் : அமோர்

* சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன்


* சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ்

* சிறந்த ஆடை வடிவமைப்பு: அன்னா கரீனினா

* சிறந்த மேக் ஆப் : லிசா வெஸ்ட்கோட்

* சிறந்த சிகை அலங்காரம் : ஜூலி டார்ட்னெல்

* சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படம் : கர்ஃப்யூ

* சிறந்த ஆவண குறும்படம் : இனோசென்ட்

* சிறந்த குறும்படம் : சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்

* சிறந்த பாடல் : அடிலி அட்கின்ஸ் மற்றும் பால் எப்வொர்த் (ஸ்கைபால்)

* சிறந்த சவுண்ட் மிக்சிங் : லேஸ் மிசெரபில்ஸ் படம்

* சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஜீரோ டார்க் தர்ட்டி மற்றும் ஸ்கைஃபால் படங்கள்

* சிறந்த புரோடெக்ஷன் டிசைன் : லிங்கன்

* சிறந்த திரைக்கதை : குயின்டின் டரான்டினோ (ஜன்கோ அன்செயிண்டு)

* சிறந்த மாற்று திரைக்கதை : கிறிஸ் டெரியோ (அர்கோ)

Comments