Sunday,10th of February 2013
சென்னை::ஜெயம் ரவி, திரிஷா நடிக்க, எஸ்.பி.ஜனநாதனிடன் இணை இயக்குநராக பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் 'பூலோகம்' படத்தின் இறுதிக் காட்சியை 4 கோடி செலவில் படமாக்கி வருகிறார்கள்.
இதற்காக திருவண்ணாமலையில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. மேலும் இந்த காட்சியில் நடிக்கை சென்னையில் இருந்து ஆயிரக்க
ணக்கான துணை நடிகர், நடிகைகள், திருவண்ணாமலை பகுதியில் உள்ள நான்கு ஆயிரம் மாணவர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து திரட்டப்பட்ட 150 விளையாட்டு வீரர்கள் ஆகியோரும் இந்த இறுதிக் காட்சியில் நடித்து வருகிறார்கள்.
இந்த இறுதிக் காட்சியின் கடைசி நான்கு நாட்களில் ஹாலிவுட்டிலிருந்து வரும் சண்டைக் கலைஞர்கள் நடிக்கிறார்கள். இந்த இறுதிக் காட்சிக்கு மட்டும் 4 கோடி வரை செலவாகும் என்று இப்படத்தை தயாரிக்கும் ஆஸ்கார் நிறுவனம் கூறியுள்ளது.
Comments
Post a Comment