Monday,4st of February 2013
சென்னை::நடிகர் சங்க நிதி 20 ஆண்டில் ரூ.200 கோடியாக உயரும் என்று சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார். புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்க ஆண்டு விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. சங்க தலைவர் கரையரசன் தலைமை வகித்தார். நடிகர் கள் சந்திரசேகர், ராதாரவி, சேலம் மேயர் சவுண்டப்பன், சங்க செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசுகையில், நடிகர் சங்க நிதி தற்போது ரூ.3.50 கோடி உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் அது ரூ.200 கோடியாகும். அப்போது அது எல்லோருக்கும் நன்மையை உண்டாக்கும். நான் தவறு செய்யவில்லை. எதை பற்றியும் நான் கவலைப்படமாட்டேன். மலேசிய நாட்டின் உயர்ந்த விருதான டத்தோ விருதை நடிகர் ராதாரவி பெற்றிருக்கிறார். அந்நாட்டை சேர்ந்தவர் அல்லாத இந்தியர் ஒருவர் இந்த விருதை பெறுவது ராதாரவி மட்டும்தான் என்றார்.நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசுகையில், கன்னட படங்களில் நடித்து கொண்டிருந்த நிலையில் என்னை மன்மதலீலை திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்தவர் கமலஹாசன்தான். மக்களுக்கு சேவை செய்தால் சிலை கூட வைப்பார்கள். சமுதாயத்திற்கு தொண்டு செய்தால் மக்கள் மறக்கவே மாட்டார்கள். இன்னும் தமிழகத்தில் நாடகங்களுக்கு மக்கள் ஆதரவு தந்து கொண்டு தான் உள்ளனர் என்றார்.
சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பலப்பரிட்சைசினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பலப்பரிட்சை
Comments
Post a Comment