Tuesday,26th of February 2013
சென்னை::ஒரு நாளுமில்லாத திருநாளாய் வரும் மார்ச் மாதம் முதல் தேதியன்று மட்டுமே 9 படங்கள் வெளியாகப் போகின்றன.
இந்த பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 25 படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தன. ஆனால் விஸ்வரூபம் படத்துக்கு அதிகபட்சமாக 500 அரங்குகள் கொடுத்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது.
இதன் விளைவு பெரும்பாலான படங்களை தள்ளி வைத்துவிட்டனர். அந்தப் படங்கள் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன.
வரும் மார்ச் 1-ம் தேதி மட்டும், கருணாஸ் நடித்த சந்தமாமா, புதுமுகங்கள் நடித்த வெள்ளச்சி, கண்பேசும் வார்த்தைகள், கரும்புலி, நினைவோடு கலந்துவிடு, நேசம் நெசப்படுதே, ஆண்டவ பெருமாள், நான்காம் பிறை 3 டி, சுண்டாட்டம், ரொம்ப நாளாக பராக் பராக் என்று சொல்லிக் கொண்டிருக்கும் லொள்ளு தாதா போன்ற படங்கள் திரையைத் தொடுகின்றன.
இந்தப் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் லிஸ்ட் கூட வெளியாகியுள்ளது.
இந்த ஒன்பது படங்களும் ஒரே நாளில் வெளியானால், அதிகப் படங்கள் வெளியான சாதாரண வெள்ளிக்கிழமை இந்த வாரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment