விஜய் ‘Hot & Spicy Girlfriend'-உடன் ’ஜில்லா’!!!

Monday,14th of January 2013
சென்னை::நண்பன், துப்பாக்கி ஆகிய இரு படங்களும் விஜய் நடித்த படங்களின் தொடர் தோல்வியைத் தகர்த்து பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தன. இந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியில் அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார் விஜய்.

தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் அமலாபாலுடன் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், தனது அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார். துப்பாக்கி ரிலீஸான போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் “ என்னை மலையாளத்தில் நடிக்கும்படி பலரும் கேட்கிறார்கள்.என்னுடன் மாலிவுட் திரையுலகின் பெரிய நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றோர் நடித்தால் நான் நடிக்க தயார்” என்று கூறினார்.

விஜய் கமிட் ஆகி இருக்கும் புதிய படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். எனவே இந்தப் படம் இரு மொழிகளிலும் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது. மேலும் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த விஜய்யின் ‘Hot & Spicy Girlfriend' காஜல் அகர்வால் தான் புதிய

படத்திலும் ஜோடியாம்.

'ஜில்லா' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஜெயம் ராஜாவின் அசிஸ்டண்ட் நேசன் இயக்குகிறாராம். கும்கி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்த இசையமைப்பாளரான இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சூப்பர் குட் மூவீஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இந்த படத்தை தயாரிக்கிறார்.

Comments