மீடியாவிடம் நயன்தாரா திடீர் கோபம்!!!

Friday,11th of January 2013
சென்னை::என்னை தனியாக இருக்க விடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள்‘ என்று மீடியாவிடம் கோபம் அடைந்திருக்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கும் அஜீத் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஜனவரி 1ம் தேதி முதல் மும்பையில் நடந்து வருகிறது. சுமார் 10 நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நயன்தாரா நடித்தார். தற்போது அட்டிலி இயக்கும் ‘ராஜா ராணி படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்.


முன்பெல்லாம் ஷூட்டிங்கில் இருக்கும்போது சக நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பார் நயன்தாரா. ரீ என்ட்ரிக்கு பிறகு அவரது போக்கு மாறிவிட்டது. யாரிடமும் பேசாமல் தனிமையில் அமர்ந்திருக்கிறார். தானுண்டு தன் வேலை உண்டு என சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு போகிறார். அவரிடம் பத்திரிகையாளர்கள் பேச முயன்றபோது, ‘நீங்கள் எப்போதும் என்னை தனிமையில் விடுவதில்லை. என்னுடைய வாழ்வில் இப்போது அதிகப்படியாக எதுவும் நடக்கவில்லை. வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறேன். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. என்னை தனிமையில் விடுங்கள் என்று கோபமாக கூறினார்.

Comments