Friday,11th of January 2013
சென்னை::கிளாமரை குறைத்து காமெடி மற்றும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த போகிறாராம் நடிகை ஹன்சிகா மொத்வானி.
இவர் ‘எங்கேயும் எப்போதும்’, ‘மாப்பிள்ளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் காமெடியில் இவருக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஆர்யாவுடன் நடித்து வரும் ‘சேட்டை’ படத்திலும் முழுக்க முழுக்க காமெடியில் களமிறங்கியுள்ளாராம். இப்போது வரும் படங்களில் காமெடி என்றால் நாயகனுக்கும், காமெடி நடிகருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்துதான் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், ‘சேட்டை’ படத்தில் நாயகன், காமெடியன், நாயகி என மூவரையும் மையமாக வைத்து காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் தனக்கு காமெடியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உற்சாகத்தில் இருக்கிறாராம் ஹன்சிகா.
இப்படத்திற்கு பிறகு சித்தார்த் ஜோடியாக ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். சுந்தர்.சி படங்கள் என்றால் காமெடிக்கு பஞ்சமிருக்காது. ஆகவே, இந்த படத்திலும் காமெடியில் வெளுத்துக்கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment