Monday,28th of January 2013
சென்னை::தொப்பை விழுந்தால் ஹீரோயின்களுக்கு சான்ஸ் காலி என்றார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் அளித்த பேட்டி: என்னை தென்னிந்திய நடிகை என்று வட நாட்டில் சொல்கிறார்கள். நான் தெற்கு மும்பையை சேர்ந்தவள். ஆரம்ப காலகட்டங்களில் தென்னிந்திய படங்களில் பணியாற்றச் சென்றபோது வேற்று கிரகவாசிபோல உணர்ந்தேன். மும்பையில் வளர்ந்ததால் தாராள எண்ணத்துடன் இருப்பேன். ஷூட்டிங்கிற்காக கர்நாடக-ஆந்திரா பார்டரில் உள்ள மதனப்பள்ளி என்ற கிராமத்துக்கு முதன்முறையாக தெலுங்கு படத்தில் நடிக்க சென்றேன். வயல் வெளியிலும், ஆடுகளுக்கு இடையிலும் புகுந்து ஓடும்படியான காட்சியில் நடித்தேன். சைக்கிளும் ஓட்டினேன். இதற்குமுன் சைக்கிள் ஓட்டி பழக்கமில்லாததால் பயந்துவிட்டேன். நடப்பது எதையும் என்னால் நம்ப முடியவில்லை.
பாலிவுட் படங்களில் ஹீரோயின்கள் ஒல்லியாக இருந்தால்தான் மவுசு. தென்னிந்திய படங்களில் பூசினாற்போன்று இருந்தால்தான் மவுசு. தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாலிவுட்டில்கூட ஒல்லிக்குச்சி உடம்பு இருக்க வேண்டும் என்ற நிலை மாறி இருக்கிறது. தொப்பை விழாத வரையில் ஹீரோயினாக நடிக்க முடியும். தொப்பை விழுந்தால் சான்ஸ் காலி. தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Comments
Post a Comment