Tuesday,22nd of January 2013
சென்னை::சினிமா என்கிற கனவு தொழிற்சாலைக்குள் வந்து விட்டாலே அவர்களைப்பற்றிய கலர் கலரான கிசுகிசுக்கள் பரவுவதும் தொடர்கதையாகி விட்டது. அந்த வகையில், நடிகை சமந்தாவைப்பற்றி ஆந்திர பட உலகில் தினம் தினம் ஒரு புது வதந்திகள் பரவிக்கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்தில் இதுவே தனக்கு பப்ளிசிட்டி என்று நினைத்து கண்டும் காணாமலும் இருந்தார் சமந்தா. ஆனால் இப்போது ஊரறிந்த நடிகையாகி விட்டதால், அதுபோன்ற செய்திகள் பரவினால் அது தனது இமேஜை களங்கப்படுத்தி விடுமோ என்று அஞ்சத்தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் சித்தார்த்- சமந்தா காதல் என்று பரவியிருக்கும் புதிய செய்தியால் தலைசுற்றிப்போயிருக்கிறார் சமந்தா. உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்ததால், அதற்கு சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தபோது, தோல் வியாதி என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த செய்தி அடங்கிய சில நாட்களிலேயே இப்போது சித்தார்த்தை காதலிப்பதாக பரவியிருக்கும் செய்தி என்னை ரொம்பவே வேதனைப்படுத்துகிறது. இதனால் நடித்து வரும் படங்களில் என்னால் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்று புகைந்து கொண்டு திரிகிறார். மேலும். காதலிப்பது, கல்யாணம் செய்து கொள்வதெல்லாம் எனது சொந்த விசயம். அதை மற்றவர்களிடம் நான் வெளிச்சம் போடவும் விரும்பவில்லை என்று தொடர்பு கொண்ட மீடியாக்களிடம் காட்டமாக பேசியிருக்கிறார் சமந்தா.
Comments
Post a Comment