சென்னை::ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, அஜீத்துடன் நடித்த பில்லா படத்துக்குப்பிறகுதான் பரபரப்பான நடிகையானார். காரணம் அதுவரை கிளாமர் விசயத்தில் ஓரளவு அடக்கி வாசித்த நயன்தாரா, அந்த படத்தில் துணிச்சலாக பிகினி உடைக்கு மாறினார். ஏற்கனவே அவரது அழகில் மயக்கத்தில் இருந்த இளவட்ட ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அதன்பிறகுதான் நயன்தாராவின் மார்க்கெட்டும் சூடுபிடித்தது.
இந்நிலையில், தற்போது செகண்ட் இன்னிங்சில் இருக்கும் அவர், அந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அமைதி காத்த நயன், இப்போது மறுபடியும் கட்டவிழ தயாராகி விட்டாராம். மீண்டும் அதே அஜீத், விஷ்ணுவர்தன் படத்தில் இணைந்திருக்கும் அவர், ஆன்மீகவாதியாட்டம் அமைதியாக காட்சி தந்தாலும், கேமரா கண்களுக்கு போதும போதும் என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறாராம். நயன்தாராவின் இந்த திடீர் தாராளம் கண்டு படத்திற்கான வியாபாரம் இன்னும் எகிறும் என்று படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது.
ஆனால், நயன்தாராவின் அதிரடி கவர்ச்சிக்கு முன்னால் உன் நடிப்பு காணாமல் போய் விட்டது என்று சிலர் சொல்ல, ஆரம்பத்தில் கிளாமரில் நாம்தான் தூக்கலாக இருப்போம் என்று கணக்குப்போட்டிருந்த அப்படத்தின் இன்னொரு நாயகியான டாப்ஸி மிரண்டு போயிருக்கிறாராம்.
Comments
Post a Comment