பரபரப்பில் இருக்க எண்ணும் டைப் நான் கிடையாது : பத்மப்ரியா பளிச்!!!

Tuesday,9th of January 2013
சென்னை::எப்போதுமே என்னைப்பற்றி பரபரப்பாக பேச வேண்டும் என்று எண்ணும் டைப் நான் கிடையாது’ என்றார் பத்மப்ரியா. ‘பட்டியல்’, ‘சத்தம்போடாதே’, ‘மிருகம்’, ‘பழஸிராஜா’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா அவர் கூறியதாவது: மோகன்லால் நடிக்கும் ‘லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்’ மலையாள படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரம். இதுபற்றி இவ்வளவுதான் இப்போதைக்கு கூற முடியும். சித்திக் இயக்குகிறார். கதையையும், வேடத்தையும் எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு அத்துப்படி. அடுத்து ‘அஞ்சு சுந்தரிகள்’ என்ற படத்திலும் நடிக்கிறேன்.

அமல் நீராத் இயக்குகிறார். பிப்ரவரியில் ஷூட்டிங். ‘கடந்த ஆண்டில் எனது படங்கள் ஹிட் ஆகவில்லையே?’ என்கிறார்கள். இது கதை மற்றும் திரைக்கதை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. யாருடன் பணியாற்றுகிறேன் என்பதும் அடங்கி இருக்கிறது. எப்போதுமே என்னைப்பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணும் டைப் நான் கிடையாது. நல்ல படம், நல்ல ஸ்கிரிப்ட் வரும்வரை காத்திருக்க நான் தயார். நல்ல படங்களில் நான் இருக்க வேண்டும் அவ்வளவுதான். தமிழிலும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன். விரைவில் ‘தங்கமீன்கள்’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு பத்மப்ரியா கூறினார்.

Comments