நள்ளிரவு பார்ட்டிகளில் நான் கலந்து கொண்டதே இல்லை- ஹன்சிகா!!!

Friday,11th of January 2013
சென்னை::மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே மற்றவர்களிடம் பழகுவதிலும், பேசுவதிலும் ஒரு இடைவெளி வைத்தே செயல்பட்டு வந்தார் ஹன்சிகா. ஆனால் அதுவே அவரது சினிமா மார்க்கெட்டுக்கு ஆப்பு வைக்கும் செயலாகி விட்டது. அதனால் பின்னர் படப்பிடிப்பு தளங்களில் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு அருகில் அமர்ந்து கடலை போடும் நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார் ஹன்சிகா. இப்படி திடுதிப்பென்று பிழைக்கத் தெரிந்த நடிகையாகி விட்டதால் அதன்பிறகு இளவட்ட ஹீரோக்களுக்கு ஹன்சிகா மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்பட்டது. திரைக்குப்பின்னால் தீவிரமாக சிபாரிசு செய்யவும் தொடங்கினார்கள்.

ஆனால், அந்த புதிய நட்பில் பூரித்துப்போன ஹன்சிகா, அதையடுத்து மெல்ல மெல்ல நடிகர்கள் நடித்தும் நள்ளிரவு பார்ட்டிகளிலும் விசிட் அடிப்பதாக ரகசிய செய்திகள் கசிந்துள்ளன. குறிப்பாக, அந்த வம்புக்கார நடிகர் மற்றும் லட்டு படத்தின் முக்கிய காமெடி நடிகர்கள் அடிக்கடி அம்மணியை பார்ட்டிக்கு அழைப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எப்படியோ நடிகையின் காதுகளை எட்டியபோது, தீயை தொட்டு விட்டவர் போல் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறாராம். சினிமாவுக்கு வந்து இதுவரை நான் எந்தவொரு பார்ட்டிகளிலும் கலந்து கொண்டதில்லை. பலர் அழைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கு சென்றால் இமேஜ் கெட்டுப்போய் விடும். அதோடு பார்ட்டியில் கண்டதை சாப்பிட்டு உடம்பும் கெட்டுப்போகும் என்பதால் நான் அந்த மாதிரி விசயங்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை என்கிறார் ஹன்சிகா.

Comments