Friday,18th of January 2013
சென்னை::வெளிநாட்டு காதலனுடன் வலம் வரும் இலியானாவால் பரபரப்பு ஏற்பட்டது. காதல் கிசுகிசுவில் சிக்காமலிருந்த இலியானா தற்போது சிக்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஆண்ட்ரூ என்பவருடன் சமீபத்தில் மும்பையில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் இலியானா. இதையடுத்து காதல் கிசுகிசு கிளம்பி உள்ளது. தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தபோதும் காதல் வதந்தி வராதபடி ஹீரோக்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார். தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். இவர் காதல் வலையில் சிக்கி இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டு புகைப்பட நிபுணர் ஆண்ட்ரூவும், இலியானாவும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் சந்தித்தனர். அப்போது முதல் இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வந்தனர்.
ஆண்ட்ரூவை தனது வீட்டுக்கு அழைத்துச் விருந்து கொடுத்திருக்கிறார். அத்துடன் தன் பெற்றோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். இலியானா குடும்பத்தினர் சமீபத்தில் அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தை கொண்டாடினார்கள். அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தி பட ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றார். அப்போது ஆண்ட்ரூவையும் அவரது குடும்பத்தினரையும் இலியானா சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி இலியானா அம்மா சமிராவிடம் கேட்டபோது,‘இலியானா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 3 இந்தி படங்களில் நடிக்கிறார். அப்படியிருக்கும்போது காதலிப்பதற்கு நேரம் எங்கே இருக்கிறது. ஆண்ட்ரூவும் இலியானாவும் நல்ல நண்பர்களாக பழகிவருகின்றனர். அவர்களைப்பற்றி வேறு எந்த கதையும் கட்டி விட வேண்டாம்’ என்றார்.
Comments
Post a Comment