சென்னை பாக்ஸ் ஆபிஸ்!!!

Tuesday,8th of January 2013
சென்னை::சென்னை பாக்ஸ் ஆபிஸ்!!!

5. கள்ளத்துப்பாக்கி

சென்ற வாரம் வெளியான கள்ளத்துப்பாக்கி முதல் மூன்று தினங்களில் 1.91 லட்சங்களை மட்டும் வசூலித்து பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

4. துப்பாக்கி
எட்டாவது வார இறுதியில் சென்னையில் துப்பாக்கி 13.4 கோடிகளை வசூலித்து இந்த வருடத்தின் பெ‌ரிய வசூலை பதிவு செய்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல் 2.9 லட்சங்கள், வார நாட்களில் வசூல் 2.02 லட்சங்கள்.

3. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம
விமர்சனங்கள் பாஸிடிவாக இருந்தும் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதுவரை சென்னையில் 1.75 கோடியை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 9.4 லட்சங்கள், வார நாட்களில் வசூல் 9.6 லட்சங்கள்.

2. நீதானே என் பொன்வசந்தம
சென்ற வார இறுதியில் 14 லட்சங்களையும், வார நாட்களில் 17.9 லட்சங்களையும் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 4.74 கோடிகள்.

1. கும்கி
ஆளில்லாத கிரவுண்டில் அடித்து விளையாடுகிறது கும்கி. சென்ற வார இறுதியில் 83.6 லட்சங்களையும், வார நாட்களில் 84.1 லட்சங்களையும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்னையில் இதன் மொத்த வசூல் 8.11 கோடிகள்.

Comments